கெத்து காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் – ஒருநாள் போட்டிகளில் முதல் சதம்!

Published on: February 5, 2020
---Advertisement---

c30589c4374302a996225621831abfb9

நியுசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம்வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களம் இறங்கிய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

முதலில் களமிறங்கிய பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் முறையே 20 மற்றும் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதன் பிறகு கேப்டன் கோலியுடன் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர். கோலி 51 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்ற அதன் பின் வந்த ராகுலோடு கைகோர்த்து விளையாடிய ஸ்ரேயாஸ் தனது முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.

சற்று முன்புவரை இந்திய அணி 45 ஓவர்களில் 291 ரன்கள் சேர்த்துள்ளனர். ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் விளையாடி வருகின்றனர்.

Leave a Comment