நோ மேரேஜ்.. ஒன்லி பாய் ஃபிரண்ட்ஸ்… ஸ்ருதிஹாசனின் சூப்பர் பாலிஸி….

கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும் முழுக்க முழுக்க தனது திறமையால் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் ஸ்ருதி ஹாசன், நடிப்பு மட்டுமல்லாது இசையமைப்பது, பாடுவது என பல திறமைகள் கொண்டவர். 

தெலுங்கில் ரவி தேஜாவுடன் இவர் இணைந்து நடித்த `கிராக்’ படம்  தியேட்டர்களில் வெளியாகி மாஸ் ஹிட்டடித்திருக்கிறது.  தமிழில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘லாபம்’ திரைப்படம் செப் 10ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.

சினிமாவில் நடிக்க துவங்கிய போது, நடிகர் சித்தார்த்துடன் காதல் ஏற்பட்டு அவருடன் 3 வருடங்கள் லிவ்விங் டூ கெதரில் இருந்தார். பின் அவரை பிரிந்தார்.  அதன்பின் நடிகர் தனுஷுக்கும், அவருக்கும் பத்திக்கொண்டுவிட்டதாக செய்திகள் வெளியானது. 

அதன்பின், வெளிநாட்டு நபர் ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்தார். ஆனால் அந்த காதல் அவருக்கு கைகூடவில்லை. தற்போது அசாம் நாட்டை சேர்ந்த சாந்தனு ஹசாரிக்கா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் மும்பையில் லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வருகின்றனர்.

shurthi haasan

இதுபற்றி கேட்டால் ‘என் வாழ்வில் திருமணம் என்பதே இல்லை… லிவ்விங் டூ கெதர் மட்டுமே… விருப்பமிருந்தால் அந்த உறவை தொடர்வேன்.. இல்லையேல் பிரிந்துவிடுவேன்.. இதுதான் என் பாலிஸி’ என சிரிக்கிறார் ஸ்ருதிஹாசன்..

இது சூப்பர் பாலிஸி…

Published by
adminram