More

புது காதலருடன் கஜகஜாவில் நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் புகைப்படங்கள்

சமீபத்தில் 35வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஸ்ருதி, டெல்லியைச் சேர்ந்த டாட்டூ ஆர்டிஸ்ட் ஷாந்தனு ஹசாரிகா என்பவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வைரலாகின. இதனால், ஸ்ருதி ரொம்பவே அப்செட் ஆகினாராம்.
 
இதுகுறித்து பேசிய ஸ்ருதி, “இனிமேல் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எதுவும் பேச நான் விரும்பவில்லை. மற்றவர்களும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விட்டுவிட்டு என்னுடைய வேலையில் ஃபோகஸ் பண்ணுங்கள் என்கிறேன். இதுபற்றி பேச வேறெதுவுமில்லை’’ என்று கொதித்திருந்தார். 

இந்தநிலையில், தனது காதலர் ஷாந்தனுவுடன் ஸ்ருதி ஹாசன் டேட்டிங் சென்ற போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. மும்பையின் ஸ்டூடியோ ஒன்றில் ஷாந்தனு மற்றும் அவரது நண்பர் கரண் ஆகியோருடன் ஸ்ருதி இருப்பது போன்ற புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் வெளியிட்டிருக்கிறார். இருவரும் ஒரு மியூசிக் ஆல்பத்தில் இணைந்து பணியாற்றி வருவதாகத் தெரிகிறது. அந்த ஆல்பம் பற்றிய அறிவிப்பும் விரைவில் வரும் என்கிறார்கள்.  

Advertising
Advertising

 

Published by
adminram

Recent Posts