பிக்பாஸ் சாண்டி மாமனார் திடீர் மரணம்! ஒரே நாளில் இரண்டு சோக நிகழ்வா?

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகிலின் தந்தையார் இன்று மலேசியாவில் மரணமடைந்த சோகத்தில் இருந்தே இன்னும் பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் மீளவில்லை. அதற்குள் இன்னொரு சோக செய்தி வெளிவந்துள்ளது 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பெற்ற சாண்டியின் மாமனார் டேவிட் சுந்தர்ராஜ் என்பவர் சற்று முன்னர் மரணமடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு போட்டியாளர்கள் வீடுகளில் சோகம் நிகழ்ந்துள்ளது பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சாண்டியின் மாமனார் மரணமடைந்ததை அடுத்து அவருக்கும் அவரது மனைவிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் டேவிட் சுந்தர்ராஜ் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்தனை செய்வதாக கூறி வருகின்றனர்.

Published by
adminram