ஆனால், சாதாரணமாக பேசுவதற்கு கூட வீடியோ காலை பலரும் பயன்படுத்துவது, அதை பார்க்கும் சிலருக்கு எரிச்சலையும், கோபத்தையும் வரவழைப்பதுண்டு.
ஆனால், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியானது. ஆனால், அதை பார்த்தல் உங்களுக்கு கோபம் வராது. ஏனெனில், வாய் பேச முடியாத, காது கேட்காத ஒரு மாற்றுத்திறனாளி ஒருவர் ஸ்மார்ட்போனில் வீடியோ காலில் ஒருவரிடம் சைகை மொழியில் பேசுகிறது. அதை பார்க்கும் போது செல்போன் இவர்களுக்கும் பயன்படுகிறதே என்பது மனதிற்கு நிறைவும், நெகிழ்ச்சியும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
இந்த வீடியோவை மகேந்திரா குரூப் கம்பெனியின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்து ‘நாம் செல்போன் பயன்படுத்துவதை விமர்சிக்கிறோம். ஆனால், செல்போன் புதிய உலகத்தின் தொடர்பை துவங்கி வைத்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது..
Rashmika: புஷ்பா…
இயக்குனர் ஷங்கர்…
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…