இது நாய்க்கு எலும்புத்துண்ட போட்ட கதையால இருக்கு.. சிம்பு செஞ்ச வேலை அப்படி

சிம்புவின் பிறந்த நாள்: சிம்புவின் பிறந்த நாளை சமீபத்தில்தான் அவருடைய ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அஜித்துக்கு எப்படி ஒரு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்களோ அதை போல் சிம்புவுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய பிறந்த நாளுக்கு தொடர்ந்து மூன்று படத்தின் அறிவிப்புகளை கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார் சிம்பு. பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் சிம்பு 49 திரைப்படம்.
தொடர் அறிவிப்பு: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு 51 திரைப்படம், சிம்புவின் சொந்த தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவருடைய 50வது திரைப்படம் என வரிசையாக அறிவிப்புகளை வெளியிட்டு பெரிய ட்ரீட்டே வைத்துவிட்டார் சிம்பு. இதில் சிம்பு 50 திரைப்படம் வெறும் அறிவிப்பாகக் கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சிம்பு 50 திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் முதலில் ரஜினிக்காக சொல்லப்பட்ட கதை என அனைவருக்கும் தெரியும்.
முதலில் ரஜினி: ரஜினி நடிக்க அதை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. அப்போது பட்ஜெட் 100 கோடி என்றிருந்த நிலையில் படத்தின் ஹிஸ்டாரிக் போர்ஷனை மட்டும் குறைத்து பாருங்கள், பட்ஜெட் இன்னும் கம்மியாகும் என்று ஏஜிஎஸ் சொல்ல தேசிங்கு பெரியசாமி அதற்கு மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் சிம்பு உள்ளே வந்தார். ராஜ்கமல் இந்தப் படத்தை கையில் எடுத்தது. 100 கோடி பட்ஜெட் என்று சொல்ல தேசிங்கு பெரியசாமி அதை டெவலெப் பண்ணும் போது150 லிருந்து 200 கோடி வரை பட்ஜெட் ஆனது.
யோசித்த ராஜ்கமல்: இதனால் ராஜ்கமல் நிறுவனம் கொஞ்சம் யோசித்தார்கள். அதனால் இந்த நிறுவனமும் கைவிட்டது. இந்தப் படத்தின் கதை சிம்புவுக்கு பிடித்துப் போக மும்பை தொழிலதிபரை நாடினார் சிம்பு. ஆனால் அவரும் பட்ஜெட் அதிகம் என மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் தானே தயாரிப்பில் இறங்குவோம் என இறங்கியிருக்கிறார் சிம்பு. ஆனால் இதற்கு டி.ராஜேந்திரன் எப்படி சம்மதம் தெரிவிப்பார் என்பதையும் பார்க்கவேண்டும்.
ஏற்கனவே சிம்புவை வைத்து அவர்கள் தயாரித்த இது நம்ம ஆளு திரைப்படத்தின் சாட்டிலைட் டிஜிட்டல் இன்னும் விற்கப்படவில்லை. இதில் 200 கோடி எனும் போது டி. ராஜேந்திரன் யோசிக்கத்தான் செய்வார். இருந்தாலும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் சிம்பு 50 படத்தின் அறிவிப்பை சிம்பு வெளியிட்டியிருக்கிறார். இது அறிவிப்பாகக் கூட போவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை இது சாத்தியப்படாத போது சிம்பு 51 திரைப்படம் சிம்பு 50 ஆக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.