சிம்பு பட இயக்குனரின் இயக்கத்தில் ‘காதலன் 2? பிரபுதேவா அறிவிப்பு

Published on: February 12, 2020
---Advertisement---

bb1d920f9ef751825d28566881d895ed

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் இரண்டாம் பாக திரைப்படங்கள் அதிகம் வெளியாகி வரும் நிலையில் பிரபுதேவாவின் ’காதலன்’ திரைப்படமும் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது சிம்பு நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கி வருகிறாஅர்.

இந்த படத்தில் விளம்பரத்தில் ’காதலன் ரிட்டர்ன்ஸ்’ என்று கூறப்பட்டிருப்பதால் இந்த படம் ’காதலன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன் பிரபுதேவா வெளியிட்ட வீடியோ ஒன்றில் ’ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில்தான் விதவிதமான புதிய கெட்டப்புகளில் நடித்து உள்ளதாகவும் தனக்கே அந்த அனுபவம் வித்தியாசமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் 14ஆம் தேதி வெளிவரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து இந்த படம் காதலன் படத்தின் இரண்டாம் பாகமா? இல்லையா? என்பது தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது 

Leave a Comment