
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்க சிம்பு நடிப்பதாக இருந்த மாநாடு திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப்போனது. அதன்பின் ஒருவழியாக பஞ்சாயத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டு விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே உடல் எடை கூடியிருந்த நடிகர் சிம்பு மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார். இது தொடர்பான வீடியோவை சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
#maanaadu2020 pic.twitter.com/Py9kTQWe0r
— sureshkamatchi (@sureshkamatchi) January 18, 2020