சிம்புவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்!…பக்கா கேங்ஸ்டர் மூவி… இந்த படம் மட்டும் வந்திருந்தா?…

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியவர் கே.வி.ஆனந்த். அயன், கோ, காப்பான், மாற்றான் என தமிழ் சினிமாவில் செம ஸ்டைலான திரைப்படங்களை இயக்கியவர். பெரிய நடிகர்களின் குட் புக்கில் இருந்தவர். 

இவர் சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இவர் சிம்புவுக்கென ஒரு கதையை தயார் செய்து வைத்திருந்தார். அந்த கதை சிம்புவிக்கும் மிகவும் பிடித்துப்போனது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்க திட்டமிட்டிருந்த நிலையில்தான் அவர் திடீரென மரணம் அடைந்தார்.

சிம்புவுக்கெனெ அவர் உருவாக்கி வைத்திருந்தது ஒரு கேங்ஸ்டர் கதை. கேங்ஸ்டர் கும்பலின் தலைவனின் வலதுகரமான சிம்பு, அவரை விட 5 வயது முத்த பெண்ணை காதலிப்பது போன்ற கதையாம். அனேகமாக கேங்கஸ்டர் தலைவரின் மகளாக இருக்கலாம். இப்படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க கே.வி. ஆனந்த விரும்பினாராம். 

அதேபோல், லலிதா ஜூவல்லரி அதிபரை கேங்கஸ்டர் தலைவனாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம். இந்த கதையை கேட்ட சிம்பு, எனக்கு சில கோடிகள் சம்பளத்தை குறைத்து கொடுத்தாலும் பரவாயில்லை. இப்படத்தில் நான் நடிக்கிறேன் என கே.வி.ஆனந்திடம் கூறியிருந்தாராம். ஆனால், அதற்குள்தான் கே.வி.ஆனந்தின் மரணம் நிகழ்ந்துவிட்டது.

ஏற்கனவே கோ படத்தில் முதலில் ஒப்பந்தம் ஆனவர் சிம்புதான். சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். ஆனால், சில காரணங்களால் அவர் விலகி விட அவருக்கு பதில் நடிகர் ஜீவா நடித்து அப்படம் வெளியாகியது.

கே.வி.ஆனந்த ஆசைப்பட்டது போல் சிம்பு – ஐஸ்வர்யா ராய் இணைந்து அப்படம் உருவாகியிருந்தால் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை..  ரசிகர்களுக்கு அதை ரசிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
 

Published by
adminram