வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மீது படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இப்படத்தின் முதல் சிங்கிள் முழுமையான பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இன்று மாலை 7.30 மணிக்கு சிம்பு உள்ளிட்ட படக்குழு டிவிட்டர் ஸ்பேஸில் ரசிகர்களிடம் உரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு முன் அப்படத்தின் விளம்பரத்திற்காக தனுஷ் உள்ளிட்ட படக்குழு டிவிட்டர் பேஸில் ரசிகர்களிடம் உரையாடினர். இதில், ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு தனுஷ் பொறுமையாக பதிலளித்துள்ளார். அதே பாணியில் தனுஷ் இன்று டிவிட்டர் ஸ்பேஸில் ரசிகர்களிடம் பேசவுள்ளார்.
இதனையடுத்து, எங்கள தலைவரை நீ காப்பி அடிக்கிறாய் என தனுஷ் ரசிகர்கள் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்…
கார்த்தி நடிப்பில்…
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…