படமே ஆரம்பிக்கல!…அதுக்குள்ள பஞ்சாயத்தா?.. சிம்பு படத்துக்கு வந்த டைட்டில் பிரச்சனை….

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இது சிம்புவின் 47வது திரைப்படமாகும். எனவே, டிவிட்டரில் #SilambarasanTR47  மற்றும் #STR47  ஆகிய ஹேஷ்டேக்குகளை சிம்பு ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இப்படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் சிம்பு இதுவரை பார்த்திராத தோற்றத்தில் நிற்கிறார். சிம்பு படத்தின் இந்த போஸ்டர் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இப்படத்திற்கு தலைப்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, மதிசுதா என்பவர் இதே தலைப்பில் ஒரு திரைப்படத்தை அறிவித்தார். தலைப்பிற்கு கீழ் ‘மூடப்பட்ட பங்கர்களுக்குள் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றன’ என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. தற்போது அதே தலைப்பை கௌதம் மேனன் தேர்ந்தெடுத்துள்ளார். எனவே, விரைவில் இது தொடர்பாக பஞ்சாயத்து எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Published by
adminram