அஜித் நடித்த விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் அடுத்ததாக தற்போது தனுஷின் பட்டாஸ் என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் வரும் 16-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படமாக ’ஒஸ்தி 2’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளிவந்த ஒஸ்தி திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இருப்பினும் இந்த படம் தமிழை தவிர மற்ற அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க சத்யஜோதி நிறுவனம் முன்வந்துள்ளது
ஆனால் இந்த படத்தில் சிம்பு நடிப்பாரா? அல்லது அவருக்கு பதில் வேறு ஒரு பிரபல நடிகர் நடிப்பாரா? என்பது கேள்வியாக உள்ளது. இந்த படத்தின் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளி வர இருப்பதாக கூறப்படுகிறது
சிம்புவின் மஹா திரைப்படத்தின் அட்டகாசமான போஸ்டர் நேற்று வெளியான நிலையில், அவர் நடிக்கயிருக்கும் ’மாநாடு’ திரைப்படத்தின் அறிவிப்பு வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில், ’ஓஸ்தி 2’ படத்திலும் சிம்பு நடிப்பதாக அறிவிப்பு வந்தால் சிம்பு ரசிகர்களுக்கு டிரிபிள் விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
1937ம் வருடம்…
லோகேஷ் கனகராஜ்…
பிக்பாஸ் வீட்டில்…
விஜயின் ஜனநாயகன்…
விஜய் டிவியிலிருந்து…