சிம்புவின் ’மாநாடு’ திரைப்படம் கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிம்புவின் காலதாமதம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இந்த படம் கைவிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது
இதனை அடுத்து சிம்புவின் பெற்றோர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த படம் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 22ம் தேதி தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்றுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கான அறிகுறியே இல்லை என்று கூறப்படுகிறது
இதுகுறித்து படக்குழுவினர்களிடம் விசாரித்தபோது, ‘சிம்புவின் பிறந்தநாள் பிப்ரவரி 3ஆம் தேதி வருவதை அடுத்து அந்த பிறந்த நாளை கொண்டாடி விட்டு அதன் பின்னர் ஜனவரி 10-ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு கண்டிப்பாக தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலு இந்த ஆண்டு சிம்புவின் பிறந்தநாளுக்கு இயக்குனர் வெஙக்ட்பிரபு மிகப்பெரிய பார்ட்டி வைக்க முடிவு செய்திருப்பதாகவும் அந்த பார்ட்டியில் மாநாடு படத்தின் குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அன்றைய தினம் ஒரு இந்த படம் குறித்து அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறும் என்றும், கோவையில் நடைபெறும் என்றும், பாங்காக்கில் நடைபெறும் என்றும் பல்வேறு செய்திகள் வெளியானது. தற்போது வந்துள்ள புதிய செய்திகளின்படி இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான லொகேஷன்களை சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குனர் தரப்பு பார்த்துவிட்டு வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…