ஒத்த செருப்பு’ படத்திற்கு ஆஸ்கார் இல்லை: பார்த்திபன் ஏமாற்றம்

பார்த்திபன் நடித்து தயாரித்த ஒத்த செருப்பு’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பார்த்திபன் மட்டுமே ஒரு முழு படத்திலும் நடித்தி இருந்த இந்த படம் வித்தியாசமான முயற்சியாக அனைவராலும் பாராட்டப்பட்டது

இந்த நிலையில் இந்தப் படம் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு செல்லும் பட்டியலில் இருந்தும் இந்திய குழுவினர்கள் இந்த படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யவில்லை. இதனை அடுத்து பார்த்திபன் நேரடியாக இந்த படத்தை ஆஸ்கார் பட்டியலில் சேர்க்க அமெரிக்கா சென்று முயற்சி செய்தார்.

இதன் ரிசல்ட் இன்று தெரியும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஒத்த செருப்பு’ திரைப்படம் ஆஸ்கார் பட்டியலில் இடம்பெறவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பார்த்திபன் மிகுந்த அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது 

ஏற்கனவே விகடன் விருது பட்டியலில் தனது படம் இணைக்கப்படவில்லை என தனது ஆதங்கத்தை டுவிட்டர் மூலம் பார்த்திபன் சற்று முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்கார் விருது பட்டியலில் தன்னுடைய ஒத்த செருப்பு’ படம் நிச்சயம் வரும் என்று நம்பிக்கையுடன் இருந்த அவருக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram