நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா தற்போது ’பொம்மை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஏற்கனவே இதே ஜோடி நடித்த ’மான்ஸ்டர்’ திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து தற்போது மீண்டும் இந்த படத்தில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிரியா பவானிசங்கர் இந்த படத்தில் சிறப்பாக நடித்ததை பாராட்டும் வகையில் சற்று முன்னர் எஸ்ஜே சூர்யா தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் இந்த படத்தில் நடித்தது பிரியா பவானிசங்கர் இல்லை, கொஞ்சம் திரிஷாவும் கொஞ்சம் சிம்ரனும் நடித்துள்ளனர் என்று கூறியுள்ளார்
இதனை அடுத்து ஒரு ரசிகர் தனது டுவிட்டில் ‘சிம்ரன் பாதி திரிஷா பாதி கலந்த கலவையா பிரியா. என்று கேட்டுள்ளார். அதேபோல் இன்னொரு டுவிட்டர் பயனாளி, ‘தலைவருக்கு எப்போதுமே சிம்ரன் மேல ஒரு கண்ணு தான். என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா நடித்து இயக்கிய ‘நியூ’ என்ற படத்தில் சிம்ரன் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…