இன்றளவும் பார்த்து ரசிக்க வைக்கும் சிங்காரவேலன்

by adminram |

040c866010d7aff70d0e283e28b644cd-2

சிங்காரவேலன் திரைப்படம் கடந்த 13 ஏப்ரல் 1992ல் வெளிவந்த திரைப்படமாகும். பலமுறை டிவியில் எல்லாரும் பார்த்து ரசித்த படம்தான் இது என்றாலும் இன்றும் எத்தனை முறை ஒளிபரப்பினாலும் பார்த்து ரசிக்க வைக்கும் படமாகும். கமல்ஹாசன், குஷ்பு, மனோ, சார்லி, வடிவேலு, மனோரமா, ஜெய்சங்கர், வி.கே ராமசாமி என மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தது.

கெளரவ வேடத்தில் விஜயகுமார் நடித்து இருந்தார்.

bdb745cdc9e5b4db2ea5b25b7075040e-4

அதற்கு முன் கிழக்கு வாசல், சின்னக்கவுண்டர் படத்தை இயக்கிய இயக்குனர் ஆர்.வி உதயக்குமார் கிராமத்து படங்களாலேயே மக்களிடம் எளிதில் ரீச் ஆனார். ஆனால் அதற்கு முன்பே உதயகுமார் உரிமை கீதம், புதிய வானம், உறுதி மொழி உள்ளிட்ட சிட்டி சப்ஜெக்ட் படங்களை லைட்டாக டச் செய்தவர்தான். ஆனால் அந்த படங்கள் மிகப்பெரிய பெயரை பெற்று தரவில்லை.

கிழக்குவாசல், சின்னக்கவுண்டருக்கு பிறகு ஆர்.வி உதயக்குமாரின் இயக்குனர் அந்தஸ்து கூடி இருந்தது. அவர் கிராமத்து படங்களைத்தான் நல்ல முறையில் இயக்குவார் என்ற பெயரை மாற்றி சிட்டி சப்ஜெக்டையும் மாடர்னாக அதுவும் நகைச்சுவையாக இயக்க முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்தார். இளையராஜாவின் பாவலர் கிரியேசன்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது.

சிறுவயதில் காணாமல் போன அத்தை பெண்ணை தேடி கண்டுபிடித்து கல்யாணம் கட்டுவதை லட்சியமாக கொண்ட கிராமத்து நாயகன் கமல்ஹாசன் கதாநாயகியான அத்தை பெண் குஷ்புவை தேடி நகரத்துக்கு சென்று அவரை தேடி காதலித்து கல்யாணம் செய்வதை கலகலப்பாக இயக்குனர் சொல்லி இருந்தார்.

b26945a4abad0ace9037ef82b41dabb2

படத்தின் காமெடிகளை 90ஸ் கிட்ஸ் எப்போதும் மறக்க முடியாது. ஆரம்ப கால வடிவேலு மெலிந்த தேகத்துடன் பார்த்த உடனே சிரிப்பு வரும் வகையில் நடித்திருப்பார். பாடகர் மனோ முதல் முறையாக காமெடி கலந்த நண்பர் வேடத்தில் நடித்து இருந்தார். ஆரம்பத்தில் வரும் கருவாட்டு காமெடி, கமல்ஹாசன், மனோரமா அடிக்கும் லூட்டிகள், காளியண்ண கவுண்டர் என்ற மில் ஓனர் பெயரை குஷ்புவின் கார்டியனாக வரும் ஜெய்சங்கரிடம் சொல்லி தேவையில்லாமல் வி.கே ராமசாமியை அதில் இழுத்து விட்டு கமல் அண்ட் கோ அடிக்கும் லூட்டிகள்,பைவ் ஸ்டார் ஹோட்டலில் புல்லாங்குழல் வாசிப்பவரையும் குஷ்புவையும் கமல், கவுண்டமணி அண்ட் கோ கலாய்ப்பது, ஆஸ்பத்திரியில் அடிபட்டது போல் படுத்துக்கொண்டு கமல் அடிக்கும் லூட்டிகள், ஆஸ்பத்திரி மருத்துவராக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தியை கவுண்டமணி அண்ட் கோ கலாய்ப்பது என தொட்ட இடம் எல்லாம் பட்டாசு சிரிப்புதான் இப்படத்தில்.

4c4615b1fe976bd9abff707675dbd5b6

வில்லனாக நிழல்கள் ரவி வருவார். எல்லாரையும் சமாளித்து இறுதியில் படம் கலகலப்பாக படம் முடியும். காமெடி காமெடிதான் படம் முழுவதும் நிரம்பி இருக்கும். இளையராஜா எல்லா படத்துக்கும் பாடல்களை அருமையாகத்தான் போடுவார் சொந்த படம் என்றால் விடுவாரா.

இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய், போட்டு வைத்த காதல் திட்டம், ஓரங்கா ஸ்ரீலங்கா, புதுச்சேரி கச்சேரி போன்ற பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றது இன்றளவும் தித்திப்பாய் இப்பாடல்கள் இனிக்கின்றன.

ஆர்.வி உதயக்குமார் சின்னக்கவுண்டர், கிழக்கு வாசல் போன்ற செண்டிமெண்ட் கிராமத்து கதைகளை மட்டுமே இயக்குவார் என்ற ஒரு விசயத்தை உடைத்த படம் இது. அவருக்கு செண்டிமெண்ட் மட்டுமல்ல நகைச்சுவையும் நன்றாக இயக்க வரும் என்பதை உணர்த்திய படமிது.

ஆனால் இப்படத்தின் கதையை எழுதியவர் தயாரிப்பாளர் இயக்குனர் பஞ்சு அருணாசலம் ஆவார் . இளமையான இக்கதையை அழகாக கலகலப்பாக எழுதி இருப்பார்.

மறக்க முடியாத ஒரு படம் இந்த படம்.

Next Story