More

ரீவைண்ட்- திகிலை ஏற்படுத்திய பாடும் பறவைகள்

அன்வேசனா என்ற பெயரில் தெலுங்கில் கடந்த 1985ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி வெளியானது இப்படம். அந்தப்படம் அப்படியே தமிழில் மொழி பெயர்த்து பாடும் பறவைகளாக சிறிது நாட்களுக்கு பின் வந்தது.

இப்படத்தை இயக்கியவர் வம்சி. தெலுங்கு சினிமா உலகில் கோல்டன் டேஸ் என அழைக்கக்கூடிய 80களில் கதையம்சமுள்ள பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இவர். இசைஞானி இளையராஜா இல்லாமல் இவர் தெலுங்கில் படம் இயக்குவதில்லை இளையராஜாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் இவரது படங்கள் இருக்கும். மஹரிஷி, ஆலாபனா என வம்சி இயக்கிய படங்கள் எல்லாமே இளையராஜாவின் இசை ராஜாங்கம் தான் மேலோங்கி இருக்கும்.

இப்படத்திலும் இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் தான் அதிகம். தமிழுக்கு இப்படம் ஒட்டாதது போல் இருந்தாலும் இளையராஜாவின் இசைதான் இதை தமிழ்ப்படம் என்றே பறைசாற்றும் ஏனென்றால் ஒரிஜினல் தெலுங்கு படத்தை அப்படியே மொழிமாற்றம் மட்டுமே செய்திருந்தனர். தமிழுக்காக கவுண்டமணி செந்தில் காமெடி டிராக்கை இப்படத்தில் இணைத்திருந்தனர்.
படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசமான திகில் கதைதான். ஒரு காட்டை ஒட்டிய கிராமத்தில் புலி எல்லாரையும் அடித்து கொள்கிறது என பலரும் பயத்திலேயே வாழ்கின்றனர்.

அந்த நேரத்தில் காட்டுக்கு வனத்துறையில் வேலை பார்க்க வருகிறார் கார்த்திக். கார்த்திக்கின் உயரதிகாரி  ஒரு இசை ஆராய்ச்சியாளர் அந்த அதிகாரியின் உறவுக்கார பெண்ணாக பானுப்ரியா பறவைகள் குறித்தும் இசை ஆராய்ச்சிக்காகவும் அந்த காட்டுக்கு வருகிறார்.
கார்த்திக்கும், பானுப்ரியாவுக்கு காதல் மலர்கிறது. இருவரும் காட்டுக்குள் நடக்கும் மர்மங்கள் குறித்தெல்லாம் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.
அவர்களை ஒரு கும்பல் துரத்துகிறது, நடுவில் புலி வந்து அடித்து கொன்று விட்டதாக சில கதைகள் சொல்லப்படுகிறது.

Advertising
Advertising

புலி உண்மையில் வருகிறதா யார் இந்த வேலை எல்லாம் செய்வது எதற்காக செய்கிறார்கள் என பரபரப்பாக இந்த படம் இயக்கப்பட்டிருக்கும்.
உண்மையில் ஒவ்வொரு காட்சியிலும் இளையராஜாவின் அதிபயங்கர பின்னணி இசை எழுந்து உட்கார வைக்கும் அந்தக்காலங்களில் தியேட்டர்களில் இப்படம் பார்த்தவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இளையராஜாவின் அதிரடி பின்னணி இசை இருந்திருக்கும்.
பின்னணி இசை மட்டுமின்றி கீரவாணி, ஏகாந்த வேளை, நிழலோ நிஜமோ, இளமை உள்ளம் போன்ற பாடல்கள் தித்திப்பாய் இனித்தன. இப்பாடல்களே தமிழில் இப்படத்தின் பெயரை சொல்கிறது. டப் செய்யப்பட்ட இந்த படம் தெலுங்கில் ஓடிய அளவு தமிழில் எல்லாம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. ஆனால் பாடல் கேசட்டுகள் விற்று தீர்ந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

சரத்பாபு, ஒய் விஜயா போன்றோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.பானுப்ரியா அப்போது படங்களில் ரீச் ஆகவில்லை. தமிழில் கார்த்திக் முகத்திற்காகவும் இளையராஜாவின் இசைக்காகவும்தான் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டிருந்தது இந்த திரைப்படம்.
சிறந்ததொரு ஹாரர் திரைப்படம் இது. கதையே பெரிய அளவில் உங்களை கவரவில்லை என்றாலும் இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பெரிய அளவில் பலரை கவரும் என்பதில் மாற்றமில்லை.

Published by
adminram

Recent Posts