ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்த தர்பார் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. முதன் முறையாக முருகதாஸ்-ரஜினி கூட்டணி என்பதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், வலுவான கதை, திரைக்கதை மற்றும் லாஜிக் எதுவுமில்லாமல் தர்பார் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக கமிஷனராக காட்டப்படிருக்கும் ரஜினியின் கதாபாத்திரம் படு சொதப்பல் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அலெக்ஸ் பால் மேனன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ ஐயா, டேய் தமிழ் இயக்குனர் களா …இனிமே இந்த IAS ,IPS பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா .. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது ..’ என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இவர் தர்பார் என குறிப்பிடவில்லை என்றாலும், இவர் முருகதாஸைத்தான் கிண்டலடித்துள்ளார் எனத் தெரிகிறது.
இவர் சத்தீஷ்கர் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணிபுரிந்தவர். ஒருமுறை மாவோயிஸ்டுகளாலும் கடத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…