ஐயா! அந்த கூட்டணி தர்மத்தை மறந்துட்டீங்க! - ராமதாஸை கலாய்க்கும் நெட்டிசன்கள்
அதில் ‘மணியம்மையின் தந்தை ஈ.வே..ராமசாமியின் நினைவு தினமான இன்று!! குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து, போக்ஸோ (Pocso) குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிகொள்வோம்’ என அறுவறுக்கத் தக்க வகையில் ஒரு பதிவைப் போட்டது. இந்த பதிவுக்கு கண்டனங்கள் எழவே உடனடியாக அதை நீக்கியுள்ளனர்.
இந்நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் குறித்து பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக ஐ.டி. பிரிவு டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து அருவருக்கத்தக்கது. இது அவர்களின் காமாலைக் கண்களைக் காட்டுகிறது. இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது!’ என பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து ‘’ஐயா.. அந்த கூட்டணி தர்மம்.. அத மறந்துட்டீங்க’ என அவரை கிண்லடித்து வருகின்றனர்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்தது. அதுபற்றி கருத்து தெரிவித்த ராமதாஸ் ‘கூட்டணி தர்மத்திற்காக அதை பாமக ஆதரித்தது’ எனக்கூறியிருந்தார். அதைத் தொடந்து ராமதாஸை நெட்டிசன்கள் ‘கூட்டணி தர்மம்’ என கிண்டலடித்து வருவது குறிப்பிடத்தக்கது.