ரசிகர்கள் மனதில் நீங்காத நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – இன்று நினைவு நாள்…

பல நாடகங்களில் நடித்தவர் கணேசன். சிவாஜி நாடகத்தில் அவரின் நடிப்பை பாராட்டி பெரியார் வைத்த பெயர்தான் ‘சிவாஜி கணேசன்’. பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகராக மாறினார். முதல் திரைப்படமே டாப் கிளாஸ். கலைஞரின் கதை, திரைக்கதை, வசனத்தில் படம் பெரிய ஹிட்.  கருணாநிதி மற்றும் அண்ணாதுரை ஆகியோர் திரைத்துறையில் பகுத்தறிவு கொள்களை பரப்பிய காலம் அது.

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சிவாஜி. அவர் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை. கர்ணன், திருவிளையாடல் சிவன், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜ ராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன், தெனாலி ராமன் என பலரின் கதாபாத்திரத்தையும் ஏற்று அவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என ரசிகர்கள் கற்பனை செய்யும் அளவுக்கு நடிப்பில் அசத்தினார். தமிழ் சினிமாவில் நடிக்க வரும் நடிகர்களுக்கு முன்னோடியாக இருக்கிறார். விஜய் உட்பட 3 தலைமுறை நடிகர்களோடு நடித்தார். 21 ஜூலை 2001ம் ஆண்டு அவர் இந்த உலகை விட்டு பிரிந்தார்.

இன்று அவரின் 20வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவரின் நினைவுகளை திரையுலகினர் பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
adminram