கை கொடுத்த சிவகார்த்திகேயனை கழட்டி விட்ட இயக்குனர்.. ரஜினி பட வாய்ப்புன்னா சும்மாவா!....
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் தேசிங்கு பெரியசாமி. முதல் படத்தையே நேர்த்தியாக, அழகாக, புத்திசாலித்தனமான திரைக்கதை மூலம் அசரடித்தார். இப்படத்தில் ரித்து வர்மா, நிரஞ்சனி, ரக்ஷன், துல்கர் சல்மான், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேசிங்கு பெரியசாமி தீவிர ரஜினி ரசிகர் ஆவார். இப்படத்தை பார்த்துவிட்டு தலைவர் ரஜினி எப்போது என்னை பாராட்டுவார் என காத்திருக்கிறேன் என ஓப்பனாக பேட்டி கொடுத்தார்.
இதற்கிடையில் படத்தை பார்த்து அசந்துபோன சிவகார்த்திகேயன் ‘வாங்க பாஸ் நாம ஒரு படம் பண்ணுவோம்’ எனக்கூறி அவரை அழைத்து பட விவாதங்கள் எல்லாம் நடந்தது. ஆனால், படத்தை பார்த்து நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி ‘நாம ஒரு படம் பண்ணுவோம்’ எனக் கூறிவிட இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப்போன தேசிங்கு பெரியசாமி சிவகார்த்திகேயனை கழட்டிவிட்டு ரஜினி படத்திற்கான கதையை உருவாக்க துவங்கிவிட்டார். அண்ணாத்த படம் முடிந்தவுடன் தேசிங்கு பெரியசாமி படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் அல்லது லைகா ஆகிய நிறுவனங்களில் ஏதோ ஒன்று தயாரிக்கவுள்ளது.
ஒருபக்கம் விஜயிடமும் ஒரு கதையை சொல்லி ஓகே செய்துள்ளார் தேசிங்கு பெரியசாமி. எனவே, இவரை இனிமேல் நம்பக்கூடாது என கணித்த சிவகார்த்திகேயன் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
ரஜினி, விஜய் பட வாய்ப்புகள் என்றால் சும்மாவா?...