செம ஸ்டைல்…இனிமேல் ஃபுல் ஹீரோதான்!.. சூரிக்கு வாழ்த்து சொன்ன சிவா…

தமிழில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகர் சூரி. அதன்பின் படிப்படியாக உயர்ந்து முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளவர் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. எனவே, இன்று காலை முதலே ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், வித்தியாசமான கெட்டப்பில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள அவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவும் வெளிவந்துள்ளது. இந்த வீடியோவை சூரியே தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த சிவகார்த்திகேயன் ‘எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி.. ஆல் செமயா இருக்கீங்க. இனிமே ஃபு ஹீரோதான். நாங்க சங்கத்துக்கு வேற செயலாளர்தான் பாக்கணும் போல. என் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். லவ் யூ அண்ணன்’ என பதிவிட்டுள்ளார்.

 

Published by
adminram