More

`தளபதி 65’ அப்டேட் கேட்ட சிவகார்த்திகேயன்!

இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் நடிக்கும் `தளபதி 65’ அப்டேட் குறித்து கேள்வி எழுப்பியது வைரலாகியிருக்கிறது. 

Advertising
Advertising

சிவகார்த்திகேயன் – நெல்சன் கூட்டணியில் உருவான டாக்டர் படம் ரிலீஸூக்குத் தயாராக இருக்கிறது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அந்தப் படத்துக்குப் பிறகு இருவருமே அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியிருக்கிறார்கள். 

இயக்குனர் நெல்சன், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை இயக்குகிறார். சிவகார்த்திகேயன் லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடிக்க இருக்கிறார். டான் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இயக்குனர் நெல்சன் வாழ்த்துச் சொல்லி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். 

அதற்குப் பதிலளித்த சிவகார்த்தியேன் நன்றி கூறியதுடன், டாக்டர் பட அப்டேட் குறித்து கேட்டார். மேலும், அவர் இயக்கி வரும் தளபதி 65 படத்தின் அப்டேட் என்ன என்று கேள்வி எழுப்பியதுடன் குறும்பாக `எப்படி கோர்த்துவிட்டுட்டேனா?’ என்றும் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, தளபதி 65 அப்டேட் கேட்டு இயக்குனர் நெல்சனை ரசிகள் தொடர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

 

Published by
adminram

Recent Posts