தனுஷ் மட்டும்தான் பண்ணுவாரா?.. இந்தா நானும் வரேன்.. களமிறங்கிய சிவகார்த்திகேயன்…

Published on: July 12, 2021
---Advertisement---

e01b68d69d3ac6d5b0ff61b01c193899-1

தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த திரைப்படம் ஜதி ரட்னலு (Jathi Ratnalu). ரு.5 கோடியில் உருவான இந்த திரைப்படம் ரூ.65 கோடியை வசூல் செய்தது. இப்படத்தை அனுதீப் என்பவர் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், இவரின் அடுத்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தின் நாராயன் தாஸ் நாரங் தயாரிக்கவுள்ளார். 

நடிகர் தனுஷ் விரைவில் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை தனுஷுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. தனுஷ் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கும் நிலையில், சிவகார்த்திகேயனும் அந்த முடிவை எடுத்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment