More

`சம்பளத்தை குறைக்க முடியாது… காசக்கொடுங்க படம் வேணா எடுத்து தரேன்’ சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் அயலான் படத்தை முடித்துக் கொண்டு தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். பொறியியல் கல்லூரியில் படிக்கும் ரகளையான ஸ்டூடண்டாக சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்குகிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.

சிவாவின் சமீபத்திய படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் இவரின் பட வியாபாரம் பெரிதாக இல்லை. இதை சுட்டிக்காட்டிய தயரிப்பு நிறுவனம் சிவகார்த்திகேயனிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்களேன் எனக் கேட்டுக் கொண்டு இருக்கிறது. ஆனால், அவரோ கடனெல்லாம் இருக்குங்க. சம்பளத்தை குறைக்கலாம் முடியாது என கறார் காட்டி இருக்கிறார். அப்போ சரி, இந்தாங்க 40 கோடி ரூபாய் பிடிங்க, உங்க சம்பளத்தை எடுத்துக்கிட்டு படத்தை முடித்துக் கொடுங்க என அவரிடமே கொடுத்து விட்டதாம். மொத்த குழுவின் சம்பளம் முதல் மற்ற எல்லா வேலைகளும் இதில் தான் செய்ய வேண்டும். இது நல்லதா எனத் தெரியவில்லை, யார் சம்பளத்தில் கையை வைப்பார் என படக்குழு வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 
 

Published by
adminram

Recent Posts