தாஜ் மஹாலில் சிவகார்த்திகேயன்... வைரலாகும் டான் படக்குழுவின் செல்ஃபி!

by adminram |

362ed21b6ccda9128a1a0ccff08e8308

நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இவர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகையான ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார்.

61f4458a82dd5c67eeedde6230f98adf-2

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் பாடல் காட்சிப்படுத்துவதற்காக டெல்லி ஆக்ராவுக்கு சென்றுள்ள படக்குழு அங்கு தாஜ் மஹாலில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அப்போது தாஜ் மஹாலின் அருகில் நின்று சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story