இனிமே நான்தான் பாஸ்! புது கூட்டணியோடு களமிறங்கும் சிவகார்த்திகேயன்.. கேட்க கேட்க எகிறுதே!..

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 17:44:19  )
sivakarthikeyan
X

தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரின் லைன்-அப்பில் அமரன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக இருந்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல் தயாரித்திருக்கிறார்.

படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கிறது. இன்னொரு பக்கம் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்து அந்த படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த இரு படங்களுக்குப் பிறகு அடுத்ததாக சிவகார்த்திகேயன் யாருடன் இணையப் போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் இயக்குனர்களை தேர்வு செய்வதில் சிவகார்த்திகேயன் இப்பொழுது கவனமாக இருக்கிறார் என்றும் ஒரு செய்தி பரவுகிறது.

அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமாகத்தான் எடுத்து வைக்கிறார் என்றும் அவருடைய இலக்கு விஜயின் இடம்தான் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 25 வது படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்றும் எச் வினோத் இயக்குவார் என்றும் பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆனால் அதற்கு முன் அவருடைய 24-வது படத்தை பற்றி இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. இப்போது வந்த தகவலின் படி சிவகார்த்திகேயன் நடிக்கும் 24 வது படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தான் இயக்கப் போகிறார் என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறாராம்.

வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. படத்திற்கான டைட்டிலும் தேர்வாகிவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஏற்கனவே சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் டான் என்ற படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் டைட்டில் இரண்டெழுத்தில் அமைந்ததால் அதே செண்டிமெண்ட்டை இந்த படத்திலும் பின்பற்றி இருக்கிறார்களாம். அதனால் இந்த படத்திற்கு ‘பாஸ்’ என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Next Story