நாகேஷ் முதல் கார்த்திக் வரை நடித்த படங்களின் தலைப்பில் மாஸ் காட்டிய SK.. இப்போ பராசக்தி
தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வளர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பராசக்தி என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஏவிஎம் புரோடக்ஷன் தயாரிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் வெளியான பராசக்தி படத்தின் தலைப்பை தான் இந்த படத்திற்கும் வைத்திருக்கிறார்கள்.
அதனால் ஏவிஎம் புரொடக்ஷனில் இருந்து தலைப்பிற்கான உரிமையை சமீபத்தில் தான் வாங்கி இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் படங்களை பொருத்தவரைக்கும் ஏற்கனவே முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான படங்களின் தலைப்பை தான் இவருடைய படங்களுக்கும் பெரும்பாலும் பயன்படுத்தி இருக்கிறார்கள். அப்படி என்னென்ன படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருக்கின்றன என்பதை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம்.
கே. பாலச்சந்தர் இயக்கத்தில் நாகேஷ் ஹீரோவாக நடித்த திரைப்படம் எதிர்நீச்சல். அந்த படம் பெரிய அளவில் வெற்றியடைந்த திரைப்படம். அந்தப் படத்தின் தலைப்பில் சிவகார்த்திகேயன் நடித்து அதுவும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வெற்றியை பெற்று தந்தது. அதன் பிறகு ரஜினியின் நடிப்பில் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்த திரைப்படம் வேலைக்காரன்.
அதில் ரஜினியின் ஹியூமர் பெரிய அளவில் பேசப்பட்டது. அதே தலைப்பில் சிவகார்த்திகேயனும் நடித்து அந்தப் படமும் ஓரளவு மக்களை திருப்தி படுத்தியது. மீண்டும் ரஜினியின் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படம் தான் மாவீரன். அந்த படத்தின் தலைப்பிலும் சிவகார்த்திகேயன் நடித்து அந்தப் படமும் ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதைப்போல கமல் நடிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் சத்யா மூவிஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் காக்கிச்சட்டை.
அந்த படத்தின் தலைப்பிலும் சிவகார்த்திகேயன் நடித்து அதுவும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு ஆக்சன் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பிறகு கடைசியாக வெளியான அமரன் திரைப்படம். எப்பேர்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரியும். அது ஏற்கனவே கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம். அந்தப் படத்தின் தலைப்பில் தான் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக்கில் நடித்து அது யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு மாபெரும் வெற்றியை பெற்றது.
இப்படி ஏற்கனவே ரஜினி, கமல் ,கார்த்திக், நாகேஷ் என இவர்கள் நடித்த படங்களின் தலைப்பில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துக் கொண்டு சிவகார்த்திகேயன். அடுத்ததாக சிவாஜி நடித்த பராசக்தி படத்தின் தலைப்பிலும் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்புவோம்.