பரபர அரசியல் ஆக்‌ஷன்…சிவகார்த்திகேயனுக்கு கதை சொன்ன அஜித் பட இயக்குனர்….

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் சிவகார்த்திகேயன். அதன்பின் தனுஷுடன் 3 உள்ளிட்ட சில படங்களில் சின்ன வேடங்களில் நடித்தார். அவரை மெரினா திரைப்படம் மூலம் கதாநாயகன் ஆக்கியவர் பாண்டிராஜ். அதன் பின் சில திரைப்படங்கள். எதிர் நீச்சல் திரைப்படம் அவரை முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாற்றியது.

அதன்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களின் வெற்றி அவரை பல கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாற்றியது.  தற்போது இவர் நடிப்பில் டாக்டர், யாழ், அயலான் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதேபோல், டான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டான் திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்கிற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.  அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கியுள்ள வினோத் ஒரு அரசியல் கதையை கூறியுள்ளாராம். 

ஒருபக்கம், இயக்குனர் பாண்டிராஜ் ஒரு கதையை சொல்லியுள்ளாராம். இதைத்தான் சிவகார்த்திகேயன் டிக் அடித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இத்தனைக்கும் அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு குணச்சித்திர வேடம்தான். ஹீரோ அவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram