விஜய் தற்போது தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. அங்கு அதிரடி சண்டை காட்சிகள் படம்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பை ஜூஅன் 15ம் தேதி சென்னையில் துவங்கலாம் என படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா 2வது அலை கடுமையாக வீசி வருவதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்காக ஒரு அழகிய பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளாராம். இப்படத்தின் இயக்குனர் நெல்சனும், சிவகார்த்திகேயனும் நண்பர்கள். சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தை இயக்கியவர் நெல்சன். அப்படத்திலும் செல்லம்மா பாடலை சிவகார்த்திகேயன் எழுதினார். அனிருத் பாடியல் அப்படல் செம ஹிட் அடித்துள்ளது. எனவே, விஜய் படத்திலும் பாடல் எழுதுமாறு நெல்சன் கேட்க மகிழ்ச்சியுடன் எழுதிக்கொடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன்…
சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களை கொண்டவர். இதற்கு முன் சில பாடல்களை எழுதி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில்…
ஒரு நடிகர்…
நடிகர் ஜீவா…
இந்த பொங்கல்…
முருங்கைக்காய் என்றாலே…