Categories: latest news

படம் ஸ்டார்ட் ஆகுறதுக்கு 6 மாசதுக்கு முன்னாடியே.. கமலை புகழ்ந்து தள்ளிய எஸ்.கே!….

Sivakarthikeyan: விஜய் டிவியில் விஜேவாக வேலை செய்து பின்னர் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்தான் சிவகார்த்திகேயன். ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் இவரை பிடிக்கும் என்பதுதான் இவரின் பிளஸ். அதோடு, ரஜினி, விஜய்க்கு பின் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகராக இருக்கிறார்.

காமெடி ரூட்: அதனால்தான் குறுகிய காலகட்டத்திலேயே சினிமாவில் உச்சம் தொட்டார். ரஜினி, விஜய், அஜித்துக்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். துவக்கத்தில் காமெடி கலந்த காதல் கதைகளில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் அவ்வப்போது சில சீரியஸான கதைகளில் நடித்து பார்த்தார்.

ஆனால், அப்படி வெளியான ஹீரோ மற்றும் வேலைக்காரன் போன்ற படங்கள் ஹிட் அடிக்கவில்லை. ஆனால், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடித்த அமரன் திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது. வழக்கமான பாணியிலிருந்து விலகி சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் இது.

அமரன் திரைப்படம்: மறைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. உண்மை சம்பவம் என்பதால் இப்படம் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாகிப்போனது. இதுவே படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை பெற்றது.

ராஜ்கமல் பிலிம்ஸ்: சமீபத்தில் இப்படத்தின் 100வது நாள் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கமல்ஹாசன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் கமலை பார்த்து ‘எனக்கு சம்பளமெல்லாம் கரெக்டா வந்துடுச்சி சார். அதுவும் படம் ஸ்டார் ஆக 6 மாசத்துக்கு முன்னாடியே முழு சம்பளத்தையும் கொடுத்திட்டீங்க.

என்னோட ஒவ்வொரு படமும் வெளியாகும்போதும் பல பிரச்சனைகள் வரும். நான் அன்பு செழியன் அண்ணன் வீட்லதான் இருப்பேன். சம்பளமே வராது. இல்லனா சம்பளத்தில் பாதியை ஒரு குரூப் பிடுங்கிக்கொண்டு போய்டுவாங்க. ஆனா, இந்த படத்தில் எனக்கு அப்படி எதுவும் நடக்கல. நன்றி சார்’ என ஜாலியாக பேசினார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

14 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 hours ago