Fanly என்கிற பொழுதுபோக்கு செயலி அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தனக்கு எப்படிப்பட்ட ரசிகர்கள் வேண்டும்.. அவர்கள் சமூகவலைத்தளங்களை எப்படி அணுக வேண்டும் என்றெல்லாம் அவர் பேசியிருக்கிறார்.
இந்த மேடையில் நிறைய அறிவாளிகள் இருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது எனக்கு மூளை கம்மி என நினைக்கிறேன். அப்படி இருப்பது நல்லதுதான். அதனால்தான் இயக்குனர்கள் சொல்வதை கேட்டு நடிக்க முடிகிறது.. எனக்கு மூளை கொஞ்சம் அதிகமாக இருந்திருந்தால் இயக்குனர்களை எல்லாம் டார்ச்சர் செய்திருப்பேன் என நினைக்கிறேன்.
எனது ரசிகர்களை நான் எப்பொழுதும் எனது சகோதர, சகோதரிகள் என்றுதான் சொல்வேன். ஏன்னா நான் உங்களை ஒரு குடும்பமாக பார்க்கிறேன். எதிலும் உங்கள் கவனம் சிதறக் கூடாது என ஆசைப்படுகிறேன். ஒருவரை வழிபடுவது போன்ற ரசிகத்தன்மையில் எனக்கு உடன்பாடு இல்லை. கடவுளையும் பெற்றோர்களை மட்டுமே நீங்கள் வணங்க வேண்டும்.. என்னை ஒரு நண்பனாக, அண்ணன், தம்பியாக பார்த்தாலே போதும். அப்படி பழகும் ரசிகர்கள்தான் எனக்கு பிடிக்கும்.
இப்ப இருக்கிற சமூக வலைத்தளங்களில் நிறைய ஆப்ஸ் கவனத்தை திசை திருப்பும் வகையில்தான் இருக்கு. இளைஞர்கள் அதில் சிக்கிக் கொள்ளக் கூடாது.. புது புது தகவல்களை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதை தேடியே அவர்களின் ஆர்வம் இருப்பது நல்லது. ஒரு நேர்மறையான எங்கேஜ்மென்ட்டாஆக இருக்கணும் நான் நினைக்கிறேன்.
இதுல அனிருத்தும் இருக்கணும்னு எனக்கு ஆசை. அவர் இதுக்கு பொருத்தமாக இருப்பார். உலகம் முழுவதும் அவருடைய இசையை பிடிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க. இந்த ஆப் பாசிட்டிவான ஒரு சூழலை கிரியேட் பண்ணனும்னு நினைக்கிறேன்’ என்று பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…