அட்லிய மிஞ்சிடுவாரு போலருக்கே சிவகார்த்திகேயன் – எங்கிருந்து உருவப்பட்டது டாக்டர் போஸ்டர் ?

இன்று காலை வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர் ஒரு ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில்கோலமாவு கோகிலாநெல்சன் இயக்கத்தில்டாக்டர்என்ற படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11.03 மணிக்கு வெளியாகியுள்ளது. ரசிகர்களின் கவனம் ஈர்த்த போஸ்டர் பரவலான பாராட்டைப் பெற்றது.

ஆனால் அந்த சந்தோஷத்தைப் படக்குழு அனுபவிப்பதற்குள்ளாகவே அந்த போஸ்டர் காப்பி என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துவிட்டனர். இந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை நழுவவிட்ட படங்களில் ஒன்றான நைவ்ஸ் அவுட் என்ற படத்தில் இருந்துதான் அந்த போஸ்டர் உருவப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து சொல்ல, இரண்டு போஸ்டர்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை நீங்களே பார்த்து அது உண்மையா இல்லையா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்

Published by
adminram