கரெப்ட்டான சிவகார்த்திகேயன்.. கூடிய சீக்கிரம் அவருக்கு வரும் ஆபத்து! இப்படி சொல்லிட்டாரு

by ராம் சுதன் |
கரெப்ட்டான சிவகார்த்திகேயன்.. கூடிய சீக்கிரம் அவருக்கு வரும் ஆபத்து! இப்படி சொல்லிட்டாரு
X

சிவகார்த்திகேயன்: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது அவரது நடிப்பில் பராசக்தி திரைப்படம் தயாராகிக் கொண்டு வருகிறது. சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முதன் முறையாக இந்தப் படத்தின் மூலம் ஜெயம் ரவி வில்லனாக களமிறங்கியிருக்கிறார்.

வில்லனாக ஜெயம் ரவி: இதன் மூலம் சினிமாவின் ஒரு சரியான ரூட்டை இப்போதுதான் ஜெயம் ரவி பிடித்திருக்கிறார் என்று தெரிகிறது. இதற்கு முன்புவரை அவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. கடைசியாக பொன்னியின் செல்வன் படம்தான் வெற்றியடைந்த படமாக கருதப்பட்டது. அதுவும் மல்டி ஸ்டாரர் படமாக பொன்னியின் செல்வன் படம் அமைந்தது.

ஆக்‌ஷனுக்கு இப்படி ஒரு கிரேஷா?: ஹீரோவாக மட்டுமில்லாமல் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் வில்லனாகவும் தேவைப்பட்டால் கேமியோ ரோலிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அந்தவகையில் விஜய்சேதுபதி அதை சரியாக பயன்படுத்தி வருகிறார் என ஆஸ்கார் மூவி தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறும் போது ஆக்‌ஷன் ஹீரோவாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டு வாய்ப்பை கோட்டை விட்டவர்கள் ஏராளம்.

என்றும் விஜய்சேதுபதி: அதில் விஜய் சேதுபதிதான் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்காமல் எல்லாவித ஜானரிலும் நடித்து இன்று வரை ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் இப்போது கரெப்ட் ஆகிவிட்டார். ஏனெனில் அவரை அனைவரும் வா தல வா தல என்று உச்சாணியில் உட்கார வைக்க பார்க்கிறார்கள். அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என்றும் கூறி ஒவர் பில்டப் கொடுத்து வருகின்றனர்.

பில்டப் நல்லது இல்லை: இது சிவகார்த்திகேயனுக்கு ஒரு வகையில் ஆபத்தாக கூட முடியும். ஏனெனில் விஜய் அஜித் ரஜினி கமல் போன்றவர்களை எடுத்துக் கொண்டால் வருடக்கணக்கில் போராடி அந்த இடத்தை அடைந்திருக்கின்றனர். ஆனால் சிவகார்த்திகேயன் இப்போதுதான் ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கிறார். அதுவும் அமரன் திரைப்படத்தில் மட்டும்தான் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

அதனால் பில்டப் கொடுத்தே அவரை அழைத்து செல்கிறார்கள். அதனால் சிவகார்த்திகேயன் கொஞ்சம் பார்த்துதான் அடியெடுத்து வைக்க வேண்டும் என பாலாஜி பிரபு கூறியிருக்கிறார். சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் ரிலீஸ் தேதி இனிமேல்தான் அறிவிக்கப்படும்.

Next Story