More

சிவகார்த்திகேயனின் புதிய படம் ஓடிடியில்… ரசிகர்கள் அதிர்ச்சி…

கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. ஏற்கனவே, பொன்மகள் வந்தாள், பென்குயின், டேனி, லாக்கப் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி விட்டது. குறிப்பாக சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி அமேசன் பிரைமில் வெளியாகவுள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில், கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் தற்போது இயக்கி வரும் ‘டாக்டர்’ திரைப்படமும் ஓடிடியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த்யுள்ளது.

Published by
adminram

Recent Posts