ஒரே நாளில் ரசிகர்களுக்கு டபுள்ட்ரீட் தரும் சிவகார்த்திகேயன்!

இந்த போஸ்டர் அவரது ரசிகர்களால் பெருமளவில் வரவேற்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த அதிரடியாக ’அயலான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருப்பதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’அயலான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் இன்று இரவு 7.07 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இதுவரை ’டாக்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை புரமோசன் செய்து கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது ’அயலான்’ படத்தையும் புரமோஷன் செய்ய தயாராகி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத்திசிங் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram