
நேற்று இன்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ‘அயலான்’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இன்று சிவகார்த்த்கேயன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, அவர் நடித்து வரும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது.
இந்நிலையில், தற்போது ‘அயலான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் சிவகார்த்திகேயன் தற்போது வெளியிட்டுள்ளார். இத்திரைப்படம் விண்வெளி தொடர்புடையது என்பதால், ஏலியனுடன், சிவகார்த்திகேயன் இருப்பது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Happy to introduce my new friend from another world
Here is the #Ayalaan first look #AyalaanFirstLook pic.twitter.com/HnNctjm6Gy— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 17, 2020