மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. இன்னும் யார் யார் தெரியுமா?

சிம்பு நடிக்க இருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக தடைகளை தாண்டி இந்த வாரம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க உள்ள புதிய நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருப்பதாகவும் முக்கிய வேடத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன், பிக்பாஸ் புகழ் டேனியல், பாராதிராஜாவின் மகன் மனோஜ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்நிலைய்ல், தற்போது இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இப்படி மாநாடு படத்தில் பிரபல நடிகர்கள் பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram