ரசிகர்களை குஷிப்படுத்த வருகிறார் எஸ்.ஜே.சூர்யா…. மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட எஸ்.கே

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இளமை ததும்ப ததும்ப படம் எடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்தும் இயக்குனரான எஸ் ஜே சூர்யா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

திறமை வாய்ந்த இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் தல அஜித். அந்த வகையில் உதவி இயக்குனராக இருந்த எஸ்.ஜே சூர்யாவிற்கு வாலி படத்தின் மூலம் வாய்ப்பளித்தார். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இயக்குனர் எஸ்.ஜே சூர்யா பிரபலமடைந்தார்.

தொடர்ந்து விஜய் மற்றும் பிற நடிகர்களை வைத்து படமெடுத்து கோலிவுட்டில் தனக்கான இடத்தை தக்க வைத்தார் எஸ்.ஜே சூர்யா. எஸ் ஜே சூர்யா இயக்கம் என்றாலே இளம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான் எனலாம்.

sivakarthikeyan

ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அவதாரம் எடுத்து, படங்கள் இயக்குவதில் இருந்து தள்ளிச் சென்றார். 

கள்வனின் காதலி, திருமகன், அன்பே ஆருயிரே, வியாபாரி, மான்ஸ்டர் என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த ‘நெஞ்சம் மறப்பதிலை’ படம் ரிலீசாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.

அந்த வரிசையில் ‘கடமையை செய்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் எஸ் ஜே சூர்யா. யாஷிகா ஆனந்த் நாயகியாக நடித்துவரும் இப்படத்தை வெங்கட் ராகவன்  இயக்கி வருகிறார். 

வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் பாதி புலி முகமும், பாதி எஸ்.ஜே.சூர்யா முகமும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்திலும் எஸ் ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

Published by
adminram