Categories: Cinema News latest news

இத எதிர்பார்த்து வந்தா ஏமாந்துதான் போவீங்க! இந்தியன் 2 பற்றி உண்மையை உடைத்த எஸ்.ஜே. சூர்யா

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருப்பவர் எஸ் ஜே சூர்யா. எந்த ஒரு பெரிய நடிகர்களின் படங்களில் பார்த்தாலும் எஸ் ஜே சூர்யா இல்லாமல் இருக்க மாட்டார். சமீப காலமாக எல்லா படங்களிலும் இவரை காண முடிகிறது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவருடைய பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். கேம் சேஞ்சர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் எஸ் ஜே சூர்யா.

மலையாளத்திலும் ஃபகத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் .இப்படி தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழி சினிமாக்களிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார் எஸ் ஜே சூர்யா. ஆரம்பத்தில் விஜய்க்கு வில்லனாக மாஸ் காட்டிய இவர் அடுத்தடுத்து பல படங்களில் வில்லனாக நடித்து ஒரு பெரிய ஹைப்பை உருவாக்கி இருக்கிறார்.

இப்போது கமலுக்கு வில்லனாக இந்தியன் 2 படத்திலும் நடித்திருக்கிறார். அதனால் கமல் மீதுள்ள எதிர்பார்ப்பை விட எஸ் ஜே சூர்யாவின் மீதுதான் இந்தப் படத்தில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அவருக்கு என ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.

அதனால் கமலுக்கு எதிராக இவருடைய நடிப்பு எப்படி இருக்கும் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் இவருடைய ஒரு பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அதில் இந்தியன் 2 படத்தை பற்றி அவருடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது இந்தியன் 2 படம் அப்படியே பிரிந்து இந்தியன் 3 படமாகவும் மாறியது. இதில் என்னுடைய காட்சி என்பது இந்தியன் 2 வில் ஒரு சின்ன போர்ஷன் தான். அதில் ஒரு கேமியோவாகத்தான் நான் வருவேன். இந்தியன் 3 படத்தில் தான் எனக்கும் கமலுக்கும் உண்டான காட்சியே சூடு பிடிக்கும்.

அதனால் மக்கள் என் மீது உள்ள எதிர்பார்ப்பில் இந்தியன் 2 படத்தை பார்க்க வந்தால் கொஞ்சம் ஏமாற்றம் அடைவார்கள். ஆனால் நான் சிறிது நேரம் வந்தாலும் என்னுடைய போர்ஷன் மிக அற்புதமாக இருக்கும். இந்தியன் 3 திரைப்படத்தில் படம் முழுக்க என்னை பார்க்கலாம் என ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்து இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

Published by
ராம் சுதன்