Connect with us

மகளின் பிறந்த நாள் போட்டோ… வனிதாவை திட்டி தீர்த்த நெட்டீசன்கள்

மகளின் பிறந்த நாள் போட்டோ… வனிதாவை திட்டி தீர்த்த நெட்டீசன்கள்

வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா அனைவருக்கும் தெரிந்ததே. இவர் தனது அம்மாவை போலவே மிகுந்த தைரியசாலியான பெண்.

9aaae89cca6129ecd4851b1ad7bc3fc7-4

வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் வனிதா விஜயகுமார். இவர் எங்கு சென்றாலும் அதை உடனே புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்வது அவரது வழக்கமாகும். இதனால் பல சிக்கலில் சிக்கி கொண்டு கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றார்.

16fabf6a8b918a785a202c05dd65fdc7

சமீபத்தில் இவர் பவர் ஸ்டாருடன் மாலையும் கழுத்துமாக வெளியிட்ட புகைப்படத்தால் நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். இதற்கு வனிதா நான் 40 ஆண்களை கூட திருமணம் செய்துகொள்வேன் என்று விளக்கம் கொடுத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா அனைவருக்கும் தெரிந்ததே. இவர் தனது அம்மாவை போலவே மிகுந்த தைரியசாலியான பெண். தனக்கு வரும் விமர்சனங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் தனது தாய்க்கு ஆதரவாக இன்று வரை பேசி வருகிறார்.

8f2a6f52b0fc3e5b0aed80cd24b5d10f

இந்நிலையில் வனிதா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் மகளின் 16வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் மகளுக்கு வாயோடு வாய் வைத்து கேக் ஊட்டும் காட்சியை பார்த்த நெட்டிசன்கள் பயங்கர கடுப்பாகி வனிதாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Continue Reading
To Top