எனக்காக ரோட்டில் படுத்து தூங்குவது எல்லாம் ஓவர்: நடிகை அதிருப்தி

என்னை பார்ப்பதற்காக மும்பை வந்து ரோட்டில் படுத்து தூங்கிவது எல்லாம் கொஞ்சம் ஓவர் என ஒரு ரசிகரை பிரபல நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்டித்துள்ளார்.

தமிழில் முகமூடி என்ற படத்திலும் ஒரு சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவரை பார்ப்பதற்காக ஆந்திராவிலிருந்து பாஸ்கரராவ் என்ற ரசிகர் சமீபத்தில் மும்பை சென்றுள்ளனர். ஆனால் இவரைப் பார்க்க முடியாததால் சாலையோரம் படுத்து தூங்கி அவரை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

இது குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிந்த பூஜா அந்த ரசிகரை நேரில் சென்று பார்த்து அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். இதுகுறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 

என்னை பார்ப்பதற்காக ஆந்திராவில் இருந்து வந்த ஒரு ரசிகர் ஐந்து நாட்களாக சாலையோரம் படுத்து தூங்கியதாக அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். இந்த அளவுக்கு ரசிகர்கள் என் மீது அன்பு வைத்து இருப்பது ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் இவ்வாறு ரோட்டில் படுத்து தூங்குவது எல்லாம் கொஞ்சம் ஓவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு யாரும் செய்ய வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by
adminram