சர்ச்சையை கிளப்பும் ‘திரௌபதி’ பட ஸ்னீக் பீக் வீடியோ...

2d2d533c85d0ba5a6056417f1fcbae9b

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ கடந்த ஜனவரி மாதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டதால் அப்பிரிவின் ஆதரவும், மற்றவர்கள் இப்படத்தை கடுமையாகவும் எதிர்த்தனர்.

இத்திரைப்படம் வருகிற 28ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியானால் மீண்டும் சாதி தொடர்பான மோதல்கள் சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், காதலனை நம்பி மோசம் போன தனது மகளின் அவல வாழ்க்கையை ஒரு தகப்பின் அழுது கொண்டே விவரிப்பது போல் காட்சி இடம் பெற்றுள்ளது.

Related Articles
Next Story
Share it