பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் ஒரு இளஞ்ஜோடி... யார் தெரியுமா?....
தமிழக மக்களிடம் வரவேற்பை பெற்ற டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். 2017ம் வருடம் ஒளிபரப்பான முதல் சீசன் வெற்றி பெற்றதால் தற்போது வரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. 4 சீசன்களையுமே கமல்ஹாசனே நடத்தினார். கடந்த வருடம் கொரோனோ பரவல் காரணமாக ஜூன் மாதம் துவங்க வேண்டிய நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தள்ளிப்போய் ஜனவரி மாதம் முடிந்தது. இதில் நடிகர் ஆதி டைட்டில் வின்னரானார்.
தற்போது 5வது சீசன் எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கமல்ஹாசன் தேர்தலில் பிஸியாக இருந்ததால் இந்த மாதம் ஜூன் மாதம் பிக்பாஸ் படப்பிடிப்பு துவங்கும் என செய்திகள் வெளியானது. ஆனால், கொரோனா 2ம் அலை காரணமாக இந்த முறையும் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி சென்றுள்ளது. இந்த முறை விஜய் டிவி மூலம் பிரபலமடைந்த புகழ், பாலா, ஷிவானி, அஸ்வின் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. ஒருபக்கம் போட்டியாளர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த முறை கவிஞர் சினேகனும் அவரின் மனைவி கன்னிகா ரவி இருவரும் ஜோடியாக பிக்பாஸ் வீட்டுக்கு செல்லவுள்ளனராம். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நான் இருக்க ஆசைப்படுகிறேன் என விஜய் டிவிக்கு கன்னிகா ரவி தூதுவிட, நீங்கள் இருவரும் ஜோடியாக வேண்டுமானால் வாருங்கள் என விஜய் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. சினேகன் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் பல நாட்கள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.