
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக இருப்பவர் கவிஞர் சினேகன். தமிழில் பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். அமீர் நடித்த யோகி என்கிற திரைப்படத்தில் நடித்தும் இருக்கிறார். அதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

அதன்பின் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். சில நாட்களுக்கு முன்பு நடிகை கன்னிகாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. எனவே, இருவரும் திருமணம் செய்து கொள்வதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இன்று காலை சினேகன் – கன்னிகா ரவி திருமணம் கமல்ஹாசன் முன்னிலையில் நடந்தது. அவர் தாலி எடுத்து தர கன்னிகா ரவி கழுத்தில் கட்டினார். இந்த திருமணத்தில் இயக்குனர் பாரதிராஜா, பேராசிரியர் ஞானசம்பந்தன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.







