சினேகா நிலமை இப்படி ஆகிப்போச்சோ!.. யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா?....
தமிழ் சினிமாவில் விரும்புகிறேன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சினேகா. முதல் படத்திலேயே பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் மாதவனுடன் நடித்தார். பின் சூர்யா, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமலுக்கு ஜோடியாகவும் நடித்தார். தற்போது அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்த பட்டாஸ் திரைப்படம் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படமாகும்.
இந்நிலையில், தற்போது இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை அச்சமண்டு அச்சமுண்டு, நிபுணன் ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் இயக்கவுள்ளார். இந்த திரைப்படம் கணவன் மனைவிக்கு இடையேயான உளவியல் பிரச்சனைகளை பேசுகிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்த அருண் வைத்தியநாதன் ‘இப்படத்தின் கதையை நான் சினேகாவிடம் கூறியபோது, இதுபோன்ற கதைகளில் நான் நடித்ததில்லை எனக்கூறினார். பின் முழுக்கதையையும் கேட்டுவிட்டு சிரித்துக்கொண்டே ‘நான் நடிக்கிறேன்’ எனகூறினார்’என தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட சினேகா வெங்கட்பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.