More

டிக் டாக் மூலம் பல பெண்கள்.. சீரழித்த கணவன்.. கதறும் மனைவி….

பலரும் தங்களது  திறமைகளை காட்ட அறிமுகப்படுத்தப்பட்ட டிக் டாக் செயலி பலரின் குடும்பங்களை சீரழித்து வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கும் சுகன்யா என்கிற பெண்ணுக்கும் 2014ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில், ராஜசேகர் சுகன்யாவை வரதட்சனை கேட்டு அடிக்கடி சித்ரவதை செய்வந்துள்ளார். எனவே, சுகன்யாவிற்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டிக் டாக் செயலி மூலம் ராஜசேகர் பல பெண்களிடம் பழகி வருவதும், சிலரை திருமணம் செய்து சீரழிப்பதையும் வழக்கமாக கொண்டிருப்பதை கண்டுபிடித்தார். எனவே, காவல் நிலையத்தில் சுகன்யா புகார் கொடுத்தார். அவர்கள் ராஜசேகரை வரவழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதன்பின் சில மாதம் அடக்கி வாசித்த ராஜசேகர் பின் மீண்டும் தனது வேலையை காட்ட துவங்கினார்.

இந்நிலையில், ராஜசேகரும், ஒரு பெண்ணும் ஒரு சினிமா பாடலுக்கு டிக் டாக் செய்வதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். விசாரணையில் டிக் டாக் செயலி மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் கவிநயா என்கிற அப்பெண்ணுடன் பழகி அவரை ராஜசேகர் திருமணம் செய்ததை சுகன்யா கண்டுபிடித்துள்ளார். எனவே, சுகன்யா மீண்டும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால், அவரின் புகாரை போலீசார் ஏற்கவில்லை. 

இதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் சுகன்யா புகார் மனு அளித்தார். அதில், பல பெண்களை ஏமாற்றி சீரழித்து வரும் தன் கணவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts