குவைத்தில் சிம்புவுக்கு இவ்வளவு மாஸா? ரசிகர்கள் செய்த ஆச்சர்ய செயல் !

நடிகர் சிம்புவுக்கு தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளம் உண்டு என்றாலும் குவைத்தில் உள்ள அவரது ரசிகர்கள் அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக ஒரு செயலை செய்துள்ளனர்.

நடிகர் சிம்பு நடித்து படம் வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. ஆனாலும் அவரது ரசிகர்கள் அவரைக் கொண்டாடத் தவறுவதில்லை. அவரது மாநாடு படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் குதூகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் குவைத்தில் உள்ள அவரது ரசிகர்கள் இணைந்து காதலர் தினத்தில் அவருக்கு ரசிகர் மன்றம் திறந்துள்ளனர். இதை முன்னிட்டு ஆட்டம் பாட்டம் என கலை நிகழ்ச்சிகளை செய்து அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Published by
adminram