சக  வீரரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் ! காரணம் இதுதான் !

சென்னை ஆவடியில் இருக்கும் பீரங்கி தொழிற்சாலையில் மன அழுத்தம் காரணமாக நிலம்பசின்ஹா என்ற ராணுவ வீரர் மற்றொரு வீரரைக் கொலை செய்தார்.

சென்னையை அடுத்த ஆவடியில் பீரங்கிகளைத் தயாரிக்கும் திண் ஊர்தி தொழிற்சாலை இருக்கின்றது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பல மாநிலங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் இங்கே பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் திரிபுராவைச் சேர்ந்த நிலம்பசின்ஹா  என்ற பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்,  ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிஜேஸ்குமார் என்ற சகவீரரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

அவரை மடக்கி பிடித்த சக வீரர்கள் அவரிடம் இருந்த துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கீமோஃபீனியா எனும் மனநோயால் பாதிக்கபட்டவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேகாலயா விமானப்படையில் பணியாற்றிய அவர் இங்கு பணிமாற்றல் செய்யப்பட்டு ஒருநாள் தான் ஆகிறது. பணிமாற்றல் பிடிக்காத காரணத்திலாயே அவர் இப்படி நடந்து கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Published by
adminram