டிராகன் படத்துல கேமியோ ரோல் பண்ணியிருக்கிறது இவரா?!.. செம ட்ரீட் இருக்கு!...

Dragon movie: தற்போது டிவிட்டர் பக்கம் போனாலே டிராகன் படம் பற்றிய செய்தியை அதிகம் பார்க்க முடிகிறது. ஏனெனில், இந்த படத்திற்கு அதிக அளவில் புரமோஷனும் செய்யப்பட்டு வருகிறது. லவ் டுடே எனும் சூப்பர் ஹிட் படத்தை பிரதீப் ரங்கநாதன் கொடுத்திருப்பதால் டிராகன் படத்திற்கும் அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
அதோடு ஓ மை கடவுளே என்கிற ரசிகர்கள் ரசிக்கும்படியான படத்தை கொடுத்த அஸ்வத் மாரிமுத்து டிராகன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின், கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தில் டிரெய்லர் வீடியோவும் வெளியானது.
கல்லூரி படிப்பை சீரியஸாக நினைக்காத ஹீரோ. அத கல்லூரியில் படிக்கும் அவரின் காதலி, நல்ல விஷயங்களை போதிக்கும் புரபஷராக மிஷ்கின் என இந்த வீடியோவை பார்த்த பலரும் இது டான் படம் போலவே இருக்கிறது என சொன்னார்கள். ஆனால், அதை அஸ்வத் மாரிமுத்து மறுத்தார்.
நீங்கள் டிரெய்லரில் பார்த்தது படத்தின் முதல் 60 நிமிடங்களில் வரும் காட்சிகள்தான். படத்தின் கதையே வேறு. இந்த படத்திற்கும் டான் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கமளித்தார். ஒருபக்கம், இவர் இயக்கிய ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதி ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார். இது படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்தது.
அதுபோல், டிராகன் படத்திலும் முக்கிய சினிமா பிரபலம் ஒருவர் கேமியோ ரோல் பண்ணியிருப்பதாக சொல்கிறார்கள். பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.கே படத்தை இயக்கி வருபவர் விக்னேஷ் சிவன். எனவே, அவரிடம் கேட்டு நயன்தாராவை நடிக்க வைத்திருக்கிறார்களா என தெரியவில்லை.
அல்லது அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதால் சிம்பு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. யார் அந்த வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதை இயக்குனர் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். எப்படியும் வருகிற 22ம் தேதி டிராகன் படம் வெளியாகும்போது இது தெரிந்துவிடும்.